2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

‘பிடுங்கிய பற்களை இணைக்க மாட்டோம்’

Freelancer   / 2022 மார்ச் 06 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன்

அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல், கம்மன்பில ஆகிய இருவருமே  மஹிந்த சிந்தனையின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் எனவும் அவ்விருவரையும் அரசாங்கம் தூக்கியெறிந்து விட்டதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, பிடுங்கி எறியப்பட்ட பற்களை மீண்டும் இணைந்துக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

“நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம்” என்றார். 

நுவரெலியா - கொத்மலை கடதொரவில் இன்று (06)  இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அதேவேளை, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களின் கடந்த கால செயற்பாடுகளை நாங்கள் நன்கறிவோம். அவர்கள் மக்களை தவறாக வழிநடத்தினர் என்று குறிப்பிட்டார்.

அப்படியானவர்களை இணைத்துக்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டிவரும். அரசாங்கத்தில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் எல்லோரையும் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு எமது கட்சி பலவீனம் அடையவில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X