2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிதுரங்கலை குன்றில் அரை நிர்வாணம்: கைதான மூவரும் விளக்கமறியலில்

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாச 

வரலாற்றுச் சிறப்பு மிக்க பிதுரங்கலை குன்றின், ரஜமகா விகாரைக்கு அருகிலிருந்து, அரைநிர்வாணமாகத் தங்களைப் புகைப்படமெடுத்து, அதனை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும், அடுத்தமாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது. 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் நேற்று (27), ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் கோசல பண்டார இலங்கசிங்க, இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மூவரும், சீகிரிய பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இதேவேளை சந்தேகநபர்கள் அறியாமை காரணமாக, இவ்வாறு புகைப்படம் எடுத்துள்ளனர் எனத் தெரிவித்து, அவர்களைப் பிணையில் விடுதலை செய்யுமாறு, சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதவானிடம் கோரிக்கை விடுத்தார். 

எனினும், தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதெனவும், நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களைப் பிணையில் விடுதலை செய்யும் அதிகாரம் இல்லையென்றும், நீதவான் தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X