2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'பிரதமரும் ஜனாதிபதியும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்'

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி​களை நிறைவேற்றுமாறு, தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ராஜித,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்தத்தில் வெற்றிப் பெற்ற பின்னர் தான் கூறியதை நிறைவேற்றியிருந்தால், அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருப்பாரெனவும், தான் அன்று கூறியவற்றை மஹிந்த இன்று நினைத்துப் பார்ப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .