2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘பிரதமரை விரட்ட முயற்சி’

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்  

மஹிந்த ராஷபக்‌ஷவை பிரதமராக்குவதற்கு முற்படுபவர்களே இடைக்கால அரசாங்கத்தை அ​மைக்க முயல்கின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் சரத் பொன்சேகா, “அவ்வாறானவர்களே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விரட்டியடிக்க முயல்கின்றனர்” என்றும் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,  “இடைக்கால அரசாங்கம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விரட்டியடிக்கும் நோக்கம் மட்டுமே உள்ளது.

எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்க முற்படுகின்றவர்களுக்கே இடைக்கால அரசாங்கம் அவசியப்படுகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .