2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘பிரதமர் தெரிவு அரசமைப்புக்கு முரணானது’

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, அரசமைப்புக்கு முரணானது என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன, புதிய பிரதமர் தெரிவுக்குப் பின்னர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுமே, அரசமைப்புக்கு முரணானது என்றும் தெரிவித்தார்.

இராஜகிரியவில் இன்று  (28) இடம்பெற்ற  ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தின் பிரதமராக, ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார் என்றும் இன்று ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் நீக்கப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என்றும் அப்போதுதான், பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய இலங்கையின் பிரதமர் யார் என்ற கேள்வியுடன் உயர்நீதிமன்றம் சென்றாலும், அதன் தீர்வு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதாகவே அமையும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதியால் புதிய பிரதமர் தெரிவுக்கு ​ஆதரவாகக் கருத்து தெரிவிப்பவர்களுக்கு, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் பற்றிய தெளிவின்மையே காரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .