2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பிரபல பாடகர் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா

J.A. George   / 2021 செப்டெம்பர் 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாடகர்களான நுவன் குணவர்தன மற்றும் அவரது மகன் கயான் குணவர்தன ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடகரும் நடிகருமான கயான் குணவர்த்தன, அவரும் அவரது தந்தை நுவான் குணவர்த்தனவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது முகநூல் கணக்கில் எழுதியுள்ளார்.

முழு குடும்பத்தினரும் நடத்திய பிசிஆர் சோதனைகளின் போது தான் இதை அறிந்ததாக அவர் கூறியுள்ளார்.

நுவன் குணவர்தன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தானும் தாயாரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X