2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பிரியங்கர பெர்ணான்டோ குற்றவாளியென அறிவிப்பு

Kamal   / 2019 டிசெம்பர் 07 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ குற்றவாளியென அந்நாட்டு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி (04) பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸாதானிகரம் முன்பாகவிருந்து  புலிகள் அமைப்பு ஆதரவாக செயற்பட்டவர்களை கழுத்தறுப்பதாக சைகை மூலம் அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போதே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

மக்கள் அமைதியை பாதுகாப்பது தொடர்பான சட்டத்தை மீறும் வகையில் அவருடைய செயற்பாடு அமைந்திருந்தன் காரணமாகவே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 2400 பவுண்ட் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

   

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .