2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பிறந்தநாள் விழாவில் பங்கெடுக்கச் சென்ற மாணவன் பலி

Editorial   / 2018 நவம்பர் 07 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கெடுக்கச் சென்ற பாடசாலை மாணவரொருவர் நேற்று (06) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டி, பன்னல, எலபெடகம பிரதேசத்தில் வசிக்கும் ஷானுக்க ஜயசிங்க (வயது 18) என்ற மாணவனே  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தன்னுடன் கல்வி பயிலும் நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்காக, குளியாப்பிட்டி – வல்பிட்டிகம பிரதேசத்திலுள்ள ஹொட்டல் ஒன்றுக்குச் சென்றிருந்த வேளையில், அதனருகிலுள்ள ஆற்றில் நண்பர்கள் அனைவரும் இறங்கி நீராடிய வேளையில், குறித்த சிறுவன் சேற்றில் புதையுண்டமையால் வெளியில் வரமுடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஹொட்டல் ஊழியர்கள் மற்றும் குறித்த பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .