2025 மே 01, வியாழக்கிழமை

பீற்றர் இளஞ்செழியன் விசாரணைக்கு அழைப்பு

Editorial   / 2025 ஜனவரி 30 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவையாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்

பீற்றர் இளஞ்செழியனின் இல்லத்துக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவு அதிகாரிகள் அழைப்பு கடிதத்தை வழங்கி சென்றுள்ளனர்

குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக 2025.02.01 ஆம் திகதி காலை 10 மணிக்கு அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவிற்கு வருகை தருமாறு அழைக்கப்படுகிறீர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .