Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாளிகாவத்தை புகையிரத முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரத கழிப்பறையிலிருந்து சிசுவொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
தெமட்டகொடை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த விவகாரம் குறித்து தற்சமயம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குறித்த புகையிரதத்தின் கழிப்பறையில் இருந்து கடந்த வாரம் தூய்மை பணியாளர் ஒருவரால் சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் புத்தளம் முதல் கொழும்பு - கோட்டை வரையிலான அனைத்து தொடருந்து நிலையங்களில் இருந்தும் சிசிடிவி காட்சிகளைக் விசாரணைக்காக கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .