2026 மே 06, புதன்கிழமை

 புங்குடுதீவு பெண் பயணித்த பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புங்குடுதீவு பெண் பயணித்த இ.போ.சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா

 தொற்று இருப்பது இன்று (18)  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டுமுறை மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வடமராட்சி, துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த இவர் உட்பட பேருந்தில் பயணித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு முறை பிசிஆர் பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவர்களில் நடத்துநர் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .