2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புதிய அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல் ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது

Editorial   / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவைக்காக நியமிக்கப்பட வேண்டிய 30 அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்படுமென, ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய அமைச்சுகளும் குறித்த பட்டியலுடன் இணைத்து அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலுக்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக புதிய அமைச்சரவை சத்தியபிரமாணம் செய்துக்கொள்ளத் தயாராகவிருப்பதாகவும் குறித்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகள் வழங்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் ​தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .