2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புதிய ஆணையாளர் நாயகத்துக்கு எதிர்ப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக மத்திய வங்கியின் துணை ஆளுநர் சீ.ஜே.பீ. சிறிவர்தனவை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய இறைவரி பொது சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தம்மால் முன்னெடுக்கபடவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அதிகாரிகள் சரியான தீர்வை வழங்காவிடின், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, தேசிய இறைவரி பொது சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் 32 வருட அனுபவம்  கொண்ட அதிகாரியான சிறிவர்தனவை தேசிய இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்க  நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .