2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புதிய விமானப்படைத் தளபதி நியமனம்

Editorial   / 2025 ஜனவரி 27 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை (27) கையளிக்கப்பட்டது.

விமானப்படையின் 20 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க வரலாற்றில் இணைகிறார்.

ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, எதிர்வரும் 29 ஆம்  திகதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க வீர விக்கிரம விபூஷன, ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் ஆகிய மூன்று விருதுகளையும் ரணசூர பதக்கத்தையும்  பெற்றுள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .