Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 30 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு நிலையத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் இன்று (30) அனுமதிக்கப்பட்டுள்ளனரென இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலை நேற்று (29) முதல் கண்காணிப்பு மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதுடன்இ நேற்றைய தினம் (29) 12 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த கண்காணிப்பு மையத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இராணுவத்தினர் ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கண்காணிப்பு மையத்தில் அனுமதிக்கப்படுபவர்கள் 14 தினங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவரெனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
புத்தளம் கடுமையங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கானதையடுத்தேஇ இந்த அதிரடி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான நபர் இந்தோனேசியா சென்று அண்மையில் நாடு திரும்பியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்துஇ குறித்த நபருடன் தொடர்புகளைப் பேணி வந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தஇ சுகாதார பரிNசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025