2025 ஜூலை 12, சனிக்கிழமை

புத்தளத்தில் விபத்து; வயோதிபர் பலி

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அசார் தீன்,  சனூன்)

புத்தளம் முள்ளிபுரம் வீதியில் இன்று(07) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் பலியாகியுள்ளார்.

புத்தளம் பெரிய பள்ளியிலிருந்து தொழுகைக் கடமையை நிறைவேற்றிவிட்டு மீன்வாடிக்குச் சென்றுவிட்டு  அவரின் வீட்டுக்கு சைக்கிளில் சென்றபோதே, முள்ளிபுரம் பகுதியிலிருந்து புத்தளம் நகரை நோக்கி வருகைத் தந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதன்போது வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 74 வயதுடைய வயோதிபர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளின் சாரதி காயங்களுக்கு உள்ளாகிய நிலையிக் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .