Editorial / 2026 ஜனவரி 14 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மத்திய அட்டவில்லுவ, போதிராஜபுர வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய அட்டவில்லுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய உபுல் குமார மற்றும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய தஹம் நிம்சர ஆகிய இருவரே விபத்தில் உயிரிழந்தனர்.
குறித்த சிறுவன் தனது தந்தை மற்றும் சகோதரருடன் அப்பகுதியில் நடந்த இறுதிச் சடங்கொன்றில் கலந்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் 36 வயதுடைய குடும்பஸ்தர் அதே இறுதிச் சடங்கு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் புத்தளம் அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இரண்டு குழந்தைகளின் தந்தையான குடும்பஸ்தர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், படுகாயமடைந்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026