2025 மே 19, திங்கட்கிழமை

புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 பேர் தப்பியோட்டம்

Freelancer   / 2022 நவம்பர் 16 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று மாலை  5 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வாருகின்றது.

இந்தநிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து  தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X