2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புனர்வாழ்வு பெற்ற அரசியல் கைதிகள் மூவர் விடுதலை

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

அரசியல் கைதிகளாகச் சிறைகளில் இருந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்ட மூவர், தமது புனர்வாழ்வுக் காலம் முடிவுற்றதையடுத்து, நேற்று (27) விடுவிக்கப்பட்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான வீரக்குட்டி கமலநாதன், 2009ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை, அரசியல் கைதியாக இருந்திருந்தார். 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருமைநாயகம் புருசோத்துமன், அரசியல் கைதியாக இருந்திருந்தார். 

இந்நிலையில், லிந்துல பம்பரகல பகுதியைச் சேர்ந்த 38 வயதான கணேசன் புஸ்பராஜ், 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார்.

இவர்கள் மூவருமே, நேற்று விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதுவரையுமான காலப்பகுதியில், 12,191 பேர் புனர்வாழ்வின் பின்னர் சமூக மயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், டேவிட் சுரஞ்சீவ் கிசாந்தன் பெர்ணான்டோ என்பவர் மாத்திரமே, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வருகின்றார். இவர், அரசியல் கைதியாக 8 வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனையும், 3 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் அனுபவித்தன் பின்னர், புனர்வாழ்வு பெற்று வருகின்றார் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X