2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புரியாணியை சாப்பிட்டிருந்தால் மைத்திரியிடமே கேட்க வேண்டும்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது எமது அரசாங்கம் இல்லை எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்

செயலாளர் சாகர காரியவசம் எம்.பி, எனவே குறித்த ஆணைக்குழுவின் முன்னாள்
ஆணையாளருடன் புரியாணி உண்டார்கள் என்றால், அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

எனினும், நாம் நம்பவில்லை. ஆணைக்குழுவுக்கு நியமிப்பவர்கள் அவ்வாறான விடயத்தை
செய்வார்கள் என்று. ஆனால் இந்த நாட்டில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தாலும்
எவரையும் தண்டிக்கும் அதிகாரம் அந்த ஆணைக்குழுவுக்கு இல்லை என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் (24) இடம்பெற்றதாகத் தெரிவித்த அவர், இதன்போது 69 இலட்சம் பேர் வாக்களித்தமை பிழையான விடயங்களை சீராக்கவே அன்றி, பிழையான செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதற்கல்ல என்பதை ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டார் என்றார்.

நாட்டின் இன்றைய நிலையில், தான் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொறுப்புகளும் கடமைகளும் நாட்டு மக்களுக்கும் உண்டென ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.

30 வருட யுத்தத்தை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்ட போது, இதேப்போல் எமது நாட்டை பல அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீட்டுடன் பல குழுக்கள் யுத்தத்துக்கு எதிரான
நிலைப்பாட்டை மக்களிடம் முன்னெடுத்தனர். இந்த குழுக்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய நிலை மக்களுக்கு இருந்தது.எனினும் அந்த சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானத்தை முன்னெடுத்து சரியான பாதையில் பயணித்த்தால், முழு உலகமே மோற்கடிக்க முடியாதென தெரிவித்த பயங்கரவாதத்தை தோற்கடித்து இலங்கையில் சமாதானத்தை நிலை நாட்ட முடிந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக சுட்டிக்காட்டினார்.

வருடாந்தம் புற்றுநோயாளும் சிறுநீரகப் பிரச்சினையாலும் பாரியளவில் உயிரிழப்புகள்
பதிவாகின்றன. இதற்கான அடிப்படை காரணம் இரசாயன உரப் பாவனை என வைத்தியர்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த நிலையை மாற்றவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அது பிரபலமான தீர்மானமாக இருக்கலாம். ஆனால் அது மக்கள் நன்மைக்கான தீர்வு. எனவே அந்த தீர்மானத்தை பலப்படுத்தி அத்தீர்மானத்துடன் ஒன்றித்து செல்வது நாட்டை நேசிக்கும் மக்களின் பொறுப்பு மற்றும் கடமை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .