2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புறக்கணிக்கப்பட்ட மாணவிக்காக தகுந்த பாடசாலையைப் பெற்றுத்தர கோரிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பின் பிரபல தனியார் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவர் குறித்த பாடசாலையில், பல்வேறு புறக்கணிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவருக்கு தகுந்த பாடசாலை ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு தலையிடுமாறு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேல்மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புறக்கணிப்புக்கு உள்ளான மாணவியின்  தாய் குறித்த பாடசாலையில் கல்வி கற்றப்போது புற்றுநோய் காரணமாக, பாடசாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால்,  இந்த மாணவியும் பல புறக்கணிப்புக்கு உள்ளாகியிருப்பதால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன இந்த கோரிக்கையை கடிதம் மூலம் மாகாண கல்வி பணிப்பாளரிடம் முன்வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளையடுத்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த மாணவியின் கல்வி நடவடிக்கைக்காக தகுதியான பாடசாலையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சிடம் கடந்த வாரம் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .