2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புறக்கோட்டையிலிருந்து புத்தரின் உருவப் படத்துடனான சேலை மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவிலிருந்து புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சேலையொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

இரண்டாம் குறுக்குத்தெருவின் நடைபாதை வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்தே இந்த சேலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை- மடபாத்த பிர​தேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புடவைகள் கொள்வனவுக்காக, புறக்​கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவுக்குச் சென்று, நடைபாதை வர்த்தக நிலையம் ஒன்றில் புடவைக் கொள்வனவில் ஈடுபட்ட போதே, குறித்த புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட புடவையை கண்டுள்ளார்.

இதனையடுத்து, 119 என்ற அவசர் தொலைபேசி அழைப்புக்கு அழைத்து இது குறித்து அறிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த இடத்தில் இருந்த நடமாடும் சுற்றுலா பொலிஸார் குறித்த வர்த்தக நிலையத்துக்குச் சென்று, குறித்த புடவையை தமது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளதுடன், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமயாளரான வர்த்தகரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X