2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பூமி சுற்றுவது நின்றால் மாத்திரமே ’தேர்தல் நிறுத்தப்படும்’

Editorial   / 2020 ஜூலை 13 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாதென தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பூமி சுற்றுவது நின்றால் மாத்திரமே தேர்தல் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று (12) கம்பஹா மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்து பல்வேறு அபிப்ராயங்கள், யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் இவை எதுவும் தேர்தலை பிற்போட காரணமாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார்.

​கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருந்தாலும் அவற்றைத் தடுக்க சுகாதாரப் பிரிவினர் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வேட்பாளர்களைப் போல, வாக்காளர்களும்  உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் இவ்வாறு பின்பற்றினால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாதென்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .