2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பூஸ்டரால் ஒருவர் பலி; விசாரணைகள் ஆரம்பம்

Freelancer   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை, கிரித்தலையில் பூஸ்டர் பெற்றுக் கொண்ட ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

உரிய விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய முடியும் என்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
 
பூஸ்டர் டோஸைப் பெற்றதன் விளைவாக மரணம் சம்பவித்ததா என்பதைத் தீர்மானிக்க ஆரம்ப பரிசோதனைகள் நடத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விவரங்களை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X