2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘பெயரைத் தாருங்கள்’

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ள, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்துக்கு, தகுதியான ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. 

“அதற்கான கடிதத்தை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீரவுக்கு, இன்று (07) அனுப்பிவைக்கப்படும்” என, தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.  

ஹிஸ்புல்லாவின் இராஜினாமாவை அடுத்து, அந்த எம்.பி பதவிக்கு வெற்றிடம் நிலவுவதாக, ​நாடாளுமன்றச் செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடந்த வௌ்ளிக்கிழமை (04) அறிவித்திருந்தார்.  

“இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரிடமிருந்து பெயர் கிடைத்தவுடன், அந்தப் பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். அதன்பின்னரே எம்.பி, பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படும்” என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.  

தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி, பதவியை இராஜினாமாச் செய்துகொண்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநராக கடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .