2025 மே 01, வியாழக்கிழமை

பெருந்தொகை கஞ்சா, பணத்துடன் 8 பேர் கைது

Freelancer   / 2021 நவம்பர் 07 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கெசல்வத்தையில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 75.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ. 790,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன், எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

75.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்களும், 3 கிராம் ஹெரோயின் மற்றும் 6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் மேலும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 790,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு 12 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேரையும்,  நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .