2025 ஜூலை 12, சனிக்கிழமை

’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 11:06 - 1     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரித்தான பிரதமர் ஆசனத்தைப் பெற்றுக்கொடுப்பதென சபாநாயகர் எடுத்துள்ள தீர்மானத்தை, பலரும் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளனரென, ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

 

சபாநாயகரின் இந்தத் தீர்மாத்துக்கமைய, நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்பது உறுதிப்படுவதாக, சிலர் கருத்துத் தெரிவித்து வருவதாகவும், ஐ.தே.கவினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பிக்க, ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளதெனக் கூறினார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை யாருக்குக் கிடைக்கிறதென்பதைத் தீர்மானிக்கும் வரை, ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையிலேயே தங்கியிருப்பார் என்று, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பிக்கத் தவறும் பட்சத்தில், அனைத்தையும் கைவிட, ரணில் விக்கிரமசிங்க தயாராக உள்ளாரென்றும், அஜித் பி பெரேரா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 1

  • அறிவழகன் Saturday, 03 November 2018 03:48 PM

    மக்களாட்சி என்றால் மக்களால் தேர்வு செய்யப்பட்டவரே பிரதமர் ஆக இருக்க வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .