2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது தாக்குத்தல்

Niroshini   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

தமிழர்களுக்கு நீதி கோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது, சற்றுமுன்னர் திருகோணமலை பகுதியில் வைத்து சிலர் தாக்குத்தல் மேற்கொண்டுள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டப் பேரணி, இன்று (5) மூன்றாவது நாளாக, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே, திருகோணமலை - மடத்தடிச் சந்தி பகுதியில் வைத்து, பேரணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பேரணியில் பொலிஸார் கலந்துகொண்டிருந்தபோதும், இத்தாக்குத்தல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பேரணியில் கலந்துகொண்டிருந்த வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .