2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பேருந்திலிருந்து விழுந்த மாணவன் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Freelancer   / 2025 ஜூலை 04 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து நேற்று (03) மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

​​சாரதி மற்றும்  நடத்துனரின் கவனக்குறைவு மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே இவ்விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X