2025 ஜூலை 16, புதன்கிழமை

பேருவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஐவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை- பன்னில பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, 3 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுள் தாயொருவரும் அவரது மகளும் உள்ளடங்குவதுடன், மேலும் இருவர் கடற்படையின் முன்னாள் வீரர்களெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞரொருவர் காயமடைந்து, நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .