2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பேஸ்புக் விருந்து; பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை - மஸ்ஸல பிரதேசத்தில் பேஸ்புக் சமூக வலைதளத்தினை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் பங்கேற்ற 18 பேர் அடங்கிய குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களின் இரண்டு பெண்களும் உள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து போதைப்பொருட்களையும் பொலிஸாரால் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடல், சுற்றுலா, விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றுள்ளனர்.

சந்தேக நபர்களை களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .