Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜூன் 28 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைத்தியம் பிடித்த நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும், வைத்தியசாலையின் வாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த தொற்றாளர்களை கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த வைத்தியசாலையே அல்லோலக்கல்லோலப்பட்டது.
மொரவக கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள்ளே புகுந்த, பைத்தியம் பிடித்த நாய், மூன்று பெண்களே கடித்துள்ளது.
நாய், வாட்டுக்குள் புகுந்ததையடுத்து, சில தொற்றாளர்கள் கட்டில்களுக்கு மேலே ஏறி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளனர்.
அந்த சிகிச்சை நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிப்பெண்கள் 18 பேர் உட்பட, 38 பேர் சிகிச்சைப்பெற்று வந்துள்ளனர்.
அதில் சிலர், தங்கியிருந்து சிகிச்சைகளை முடிந்துகொண்டு, வீடுகளுக்குச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.
எனினும், அங்கு கடமையிலிருந்த வைத்தியசாலை பணியாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில், அந்நாயை, வாட்டுக்குள்ளிருந்து விரட்டியடித்துள்ளனர்.
அங்கிருந்து வீதிக்கு நாய் ஓடியதை அடுத்து, அங்கிருந்த சிலர் நாயை அடித்தே கொன்றுள்ளனர்.
பைத்தியம் பிடித்த அந்த நாள், வைத்தியசாலையின் வாட்டுக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago