Editorial / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை லொய்னோன் தோட்டத்தில், தொழிலாளர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவை லொய்னோன், நோத்கோ, லின்போட், ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை நாளொன்றுக்கு 18 கிலோகிலோகிராம் பச்சை தேயிலை கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன.
அதனை கண்டித்து, லொய்னோன் தோட்டத் தேயிலை தொழிற்சாலையின் முன்பாக தொழிலாளர்கள், இன்றுக்காலை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்தே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கொட்டகலை சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்ட தீர்மானம், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் எடுக்கப்பட்டதென தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனினும், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தோட்ட தலைவர்மார்கள், தலைவிமார்கள், தாங்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தோம். அவ்வாறான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என்று பதிலளித்தனர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அதனையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.





32 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
50 minute ago