2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

“பொது நிதியை தவறாகப் பயன்படுத்தினால் சட்டம் பாயும்”

Editorial   / 2025 ஜூன் 02 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அனைத்து குடிமக்களும் தங்கள் வரிக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இன்று (02) வலியுறுத்தினார், வரி வருவாய் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் திங்கடக்கிழமை (ஜூன் 2) காலை நடைபெற்ற ‘தேசிய வரி வாரத்தின்’ தொடக்க விழாவில் பேசிய ஜனாதிபதி, பொதுப் பணத்தின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனது சொந்த உத்தியோகபூர்வ செலவினங்களை முடிந்தவரை குறைத்துள்ளதாகக் கூறினார்.

மோசடியால் நிலைநிறுத்தப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிப்பதாகவும், பொது நிதியைப் பாதுகாக்க ஒரு சட்டபூர்வமான மற்றும் பொறுப்புணர்வுள்ள அமைப்பை நிறுவுவதாகவும் அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .