J.A. George / 2021 ஜூலை 05 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தொற்றாளர்கள் குறைவாக பதிவாகுவதால், ஆபத்து இல்லை என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. தொடர்ந்தும் 1,500 முதல் 2,000 வரையில் தொற்றாளர்கள் பதிவாகின்ற நிலையில், டெல்டா திரிபு தொற்றியவர்கள் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் எதிர்காலத்தில் வேறு திரிபுகளும் ஏற்படலாம். எனவே, சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025