2025 ஜூலை 02, புதன்கிழமை

பொதுமன்னிப்பு பெற்றவர் வெளிநாடு செல்ல இடைக்கால தடை

Editorial   / 2019 நவம்பர் 29 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த அன்டனி ஜயமஹ  வௌிநாடு செல்ல உயர் நீதிமன்றத்தால் இன்று (29) இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக மகளிர் மற்றும் ஊடக ஒன்றியத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட, காமினி அமரசேகர ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளர், கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாய், தந்தை ஆகியோர் இந்த மனுவில் சாட்சியாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .