2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல்: இன்றைய தீர்ப்பு

Editorial   / 2025 ஜூலை 16 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாக மூன்று பிரதிவாதிகள் மீது குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,  

சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த அரசு தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து வழக்கை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, சாட்சியங்களை தொடர புதிய திகதியைக் கோரினார்.  விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X