2025 ஜூலை 19, சனிக்கிழமை

’பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள தயார்’

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருகின்றமையினால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாத்தாண்டியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னோக்கிச் சென்றது போல, பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு  எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், டொலர் பெறுமதி அதிகரித்துள்ளமையானது, இலங்கைக்கு மாத்திரம் ஏற்பட்ட பிரச்சனை இல்லை   எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X