2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொலன்னறுவையில் வரட்சி 6,926 குடும்பங்கள் பாதிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

பொலன்னறுவை மாவட்டத்தில், அதிக வரட்சியுடனான வானிலை நிலவிவருவதனால், 6 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனரென, தெரிவிக்கப்படுகிறது.

குறித்தப் பகுதிகளில் வசித்துவரும் மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்கி வருவதாக, பொலன்னறுவை மாட்டத்தின், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வரட்சியின் காரணமாக, வெலிகந்த, தமன்கடுவ, திம்புலாகல, ஹிங்குரங்கொட, மெதிரிகிரிய மற்றும் ஹெலஹெர ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கூடுதலாக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில், 29 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த, 6,926 குடும்பங்கள் இவ்வாறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர் எனவும், இவர்களுக்கு குடிநீரை வழங்கும் வகையில், நாளொன்றுக்கு 159,500 லீற்றர் நீர் இவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் , மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பிரிவு, இன்று (27), வெளியிட்ட அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X