2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாளை கைது செய்யப்படுவார்?

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்வதா, இல்லையா? என்பது தொடர்பான உத்தரவை நாளை (3) வழங்க கொழும்பு மேலதிக நீதவான் தீர்மானித்துள்ளார்.

வெலிக்கட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு, சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா நேற்று (1) கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


இந்த நிலையிலேயே, கொழும்பு மேலதிக நீதவான் இது தொடர்பான உத்தரவை நாளை பிறப்பிக்கவுள்ளார்.
2016ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவால், ராஜகிரிய பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் வாகன விபத்து தொடர்பில் போலி சாட்சியங்களை வழங்கிய குற்றச்சாட்டிலேயே, முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைதுசெய்யுமாறு, சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .