2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் பணிப்புரை

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அது முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற அதேவேளையில், மனிங் சந்தை உள்ளிட்ட அனைத்துப் பொருளாதார நிலையங்களுக்கும் மரக்கறிகள், பழங்கள், தேங்காய்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்குத் தேவையான அனுமதி வழங்கப்பட வேண்டுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு இன்று (28) பணிப்புரை விடுத்துள்ளார். 

விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்கள் சிரமங்களின்றிச் சந்தையைச் சென்றடைவதன் மூலமாக, பாவனையாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஒழுங்காகவும் தடைகளின்றியும் அடைய வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதற்காகவே, பொலிஸ்மா அதிபருக்கு இப்பணிப்புரையை  பிரதமர் வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .