2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

போக்குவரத்து OIC உயிரிழப்பு; சாரதிக்கு பிணை

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை பொலிஸ் நிலைய  போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழப்பதற்கு காரணமான வாகன விபத்தை ஏற்படுத்திய சாரதி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையான  நவீது ஒமேஸ் ரத்னாயக்க என்ற குறித்த சாரதியை பிணைகளில் விடுவிப்பதாக, நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் அதிக்குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரதிவாதி தர்ப்பில் முன்னிலையான சட்டத்தரணி அஜித் பத்திரண விடுத்த கோரிக்கைக்கு அமைய, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி கொழும்பு, பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத் சந்திர, பயணித்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு டிப்பெண்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் உள்ளிட்ட 8பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன், டிபென்டர் வாகனத்தை செலுத்திய பொலிஸ் அதிகாரியின மகனான நவீது ஒமேஸ் ரத்னாயக்க என்பவர் விளக்கமறியில் வைக்கப்ட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், நீதிமன்றினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய குறித்த நபர் இன்று (05) மீண்டும் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் குற்றப்பத்திரம்  கையளிக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த  போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .