Freelancer / 2025 ஒக்டோபர் 23 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை தடுப்புப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போது போதை மாத்திரைகள் வியாபாரி ஒருவரும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆறு கால்மடப் பகுதியில் இந்தக் கைது நடவடிக்கை நேற்று (22) இடம்பெற்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர். இவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)
27 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
4 hours ago