2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்க பிரிவு ​ஆரம்பம்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் தொடர்பில், நாடளாவிய ரீதியிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவொன்று, பொலிஸ் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பங்குப்பற்றலுடன் இந்த சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு நிறுவப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த சிறப்பு நடவடிக்கைகள் பிரிவுக்கு தகவல்களை வழங்குவோர், 011-3024820, 011-3024840,  011-3024850  ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 011-2430912, 011-2472757 பெக்ஸ் இலக்கங்களுக்கு இன்றேல், sand@police.lk என்ற மின்னஞ்சலின் ஊடாக தகவல்களை வழங்கமுடியுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பில், மிகமுக்கியமான தகவல்களை வழங்குபவர்களின் ​விபரங்கள் பாதுகாக்கப்படுமெனத் தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், அவ்வாறானவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .