2025 மே 12, திங்கட்கிழமை

போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

Janu   / 2025 மே 11 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, கலனிகம பகுதியில் மதுபோதையில், பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

 பாணந்துறையில் - ஹொரணை   தனியார் பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

 பாணந்துறை போக்குவரத்து பொலிஸார் கலனிகம சந்திப்பில் தமது பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஹொரணையிலிருந்து வந்து கவனக்குறைவாக பல வாகனங்களை முந்திக்கொண்டு  எதிர் திசையில் பயணித்த பேருந்தை நிறுத்தி, சாரதியை   அழைத்தபோது அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்போது 40க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்ததாகவும் இந்த நிலைமை குறித்து  அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்களை வேறு பேருந்தில் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X