Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
லெப்டினன் கேணல் கலன அமுனுபுர மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளுமின்றி, அவரை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் மூலம், கேர்ணல் அமுனுபுரவை, சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாகவும் இது, இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகளை, இலங்கை ஏற்றுக்கொண்டமைக்குச் சமனென்றும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியது.
பத்தரமுல்ல - நெளும் மாவத்தையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில், நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை இராணுவ அதிகாரி தொடர்பான அரசாங்கத்தின் இந்த முடிவு பாரதூரமானதென்றுக் கூறினார்.
தமிழீழ விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது, கேணல் அமுனுபுர, இராணுவத்தின் 58ஆவது படையணியை வழிநடத்தி இருந்தாரென்றும் வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சித்தரவதை செய்துப் படுகொலை செய்ததாகவும், இந்தப் படையணியின் மீது, சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகாவினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக் காரணம் காட்டியே, அமுனுபுரவைத் திருப்பியழைக்குமாறு ஐ.நா கோரியுள்ளதாகவும், இது, இலங்கை இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய அழுத்தம் எனவும், பீரிஸ் கூறினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தினூடாக, பயங்கரவாதிகளை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாத்து, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago