2025 ஜூலை 17, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில், ​போலி நாணயத்தாள்களுடன் மூவர், நேற்று இரவு (27), தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை, ஹினிதும மற்றும் அக்குரணை பகுதிகளைச்  சேர்ந்த 22, 24, 52 வயதுகளையுடையவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வந்து, தம்புள்ளையில்  கார் ஒன்றினை வாடகைக்குப்  பெற்று திருகோணமலை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த போதே, சந்தேகநபர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, கந்தளாய் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ம் கட்டை பகுதியில் வைத்து, காரை சொதனையிட்ட போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 469 கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (28), கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X