Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தளங்கள் ஊடாக, கொரோனா வைரஸ் தொடர்பில் போலித் தகவல்களைப் பரப்பி, தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, நேற்று (16) உத்தரவிட்டார்.
பண்டாரகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, நிமிந்த பிரியதர்ஷன என்ற நபரே, இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நபர், கொரோன வைரஸ் தொடர்பில், 4,999 பேருக்கு, பேஸ்புக் மூலம் போலிப் பிரசாரங்களைச் செய்துள்ளாரென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பில் போலித் தகவல்களை பேஸ்புக்கில் பரப்பிய ராகம மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவர், குற்றப்பலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவரே, இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் வகையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்ட 23 பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் 40 பேர் இனங்காணப்பட்டு வருகின்றனர் என, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago