Janu / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி திருகோணமலை சங்கமித்தை விகாரைகக்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை (10) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பிக்குமார் உட்பட 10 பேருக்கு எதிரான வழக்கு புதன்கிழமை(11) அன்று திருகோணமலை மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் என்பவற்றில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை டச்பே கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றை அமைத்து,அதில் புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 4 பிக்குகள் உட்பட 10 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.கீதபொன்கலன்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .