Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Janu / 2025 மே 12 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் மிகவும் பழமைவாய்ந்த மத மெய்யியல்களில் ஒன்றான பௌத்த தருமத்தை உலகுக்கு அறிமுகப்படுத்த கௌதம புத்த பெருமானின் வாழ்க்கைய நினைவுகூறும் வெசாக் பௌர்ணமி தினம் இன்றாகும். இது சர்வதேச ரீதியில் மாத்திரமன்றி எமது நாட்டின் சமூக கலாசாரத்தின் அடிநாதமாக பௌத்த மதத்தின் தாக்கங்கள் காணப்படுவதால் முக்கிய மத மற்றும் கலாசார தினமான இன்று இலங்கையர்களாகிய எமக்கும் சிறப்பான நாளாகும் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது வெசாக்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கி.மு ஆறாம் நூற்றாண்டில் அப்போதிருந்த தம்பதீப பீடபூமியில் சமூக ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவுகளில் வர்க்க மற்றும் சாதி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து நல்லிணக்கம், அஹிம்சை மற்றும் சமத்துவத்திற்கான சமூக விடுதலையத் தேடிச் செல்லும் பாதையை ஆன்மீக ரீதியாக அவர் தனது போதனைகள் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறினார்.
தற்பொழுது காணப்படும் சிக்கல் நிறைந்த சமூகச் சூழலில் உள்ள பல நெருக்கடிகளுக்குப் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிவதற்கான வழிகள் புத்த பெருமானின் போதனைகளில் புதைந்துள்ளன என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். இருந்த போதிலும் இன்று எமது சிக்கலான சமூக வாழ்க்கையால் உருவாகியுள்ள சூழ்நிலைகள் காரணமாக புத்த பெருமான் போதித்த நீதியான ஆன்மீகப் பாதைகள் மற்றும் அந்த இலட்சியப் பாதையை அடைவதற்கான வழிகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமைகள் காரணமாக பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் கூட பௌத்த மதத்தினால் வளர்க்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்குப் பல தடைகள் உருவாகியுள்ளன. எனவே இதற்குப் பொருத்தமான சமூக, அரசியல் மற்றும் சிறந்த கலாசாரச் சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என நாம் நம்புகின்றோம்.
எனவே, பௌத்த போதனைகளினால் வரையறுக்கப்பட்ட மிகவும் பொருத்தமான, விடுதலைமிக்க மற்றும் சமத்துவம் கொண்ட சமூகங்களை எமது நாட்டில் உருவாக்குவதற்கு பௌத்த போதனைகள் நமக்கு விடிவெள்ளியாக அமையும். எனவே, சமூகம் என்ற ரீதியில் கௌதம புத்த பெருமான் போதித்த ஆன்மீக விடுதலை மற்றும் சமூக விடுதலையை நாம் அடைவதற்கான வாய்ப்புக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதுடன், இன்றையதினம் வெசாக் தினத்தைக் கொண்டாடும் இலங்கை பௌத்த மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago